இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய மேலும் இரு நாடுகள்!
Thursday, September 8th, 2022
இலங்கைக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகள் தளர்த்தியுள்ளன.
இந்நிலையில், இதுவரை 11 நாடுகள் இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.
அந்தவகையில் கிரேட் பிரிட்டன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்ரேலியா, டென்மார்க், நோர்வே, சுவீடன், கனடா மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் இலங்கைக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை முன்னதாக தளர்த்தியுள்ளன.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா பெரும் தொற்று போன்ற காரணங்களினால் பல நாடுகள் இலங்கை தொடர்பில் பயண கட்டுப்பாடுகளை அறிவித்த நிலையில் தற்போது அக்கடுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.
இதன் காரணமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க LIOC க்கு அழைப்பு - மின் இணைப்பை இந்தியாவுடன...
அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் - பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச...
வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பியுங்கள் ...
|
|
|


