இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரியை அதிகரிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
 Monday, August 24th, 2020
        
                    Monday, August 24th, 2020
            
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரியை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு இறக்குமதி வரி ரூபா 50 இலிருந்து ரூபா 55 ஆக வரி அதிகரிக்கப்படுவதாக, நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட வியாபார பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி அதிகரிப்பு, எதிர்வரும் 4 மாதங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு அதிக விலையை பெற்றுக்கொடுக்கும் வகையில், இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கிற்கு வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புறப்பட்டு 3 மணித்தியாலங்களில் மீண்டும் கட்டுநாயக்கா  திரும்பிய விமானம்!
புதையிரத கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பில்லை - அமைச்சர் மஹிந்த அமரவீர!
கொரோனா வைரஸ்: ஓசோனில் இடம்பெறும் தீடீர் மாற்றம்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        