இறக்குமதியான 30 ஆயிரம் தொன் சேதன பசளை நேற்றையதினம்முதல் பிற மாவட்டங்களுக்கு விநியோகம் – அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Thursday, October 14th, 2021

அரசாங்க நிறுவனமொன்றினால் கொள்வனவு செய்யப்பட்ட பொட்டாசியம் க்ளோரைட்டு சேதன பசளை மாவட்டங்களுக்கு விநியோகிப்பதற்காக கடந்த நள்ளிரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த சேதன பசளை தொகுதியை மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களின் விவசாய சேவை மையங்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

லித்வேனியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 30 ஆயிரம் மெட்ரிக் டன் பசளை நேற்றையதினம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

இதேவேளை, பெரும்போகத்திற்கு தேவையான பசளை கிடைக்கப்பெறவில்லையென குற்றம் சுமத்தி நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் விவசாயிகளினால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நோர்தேன் சென்ரர் வைத்தியசாலை  சத்திரசிகிச்சையில் குழறுபடி - பாதிக்கப்பட்ட நோயாளர் குற்றச்சாட்டு!
யுத்தத்தின் போது வடபகுதிக்கான உதவிப்பொருட்கள் தடுக்கப்பட்டதென்பது உண்மைக்கு புறம்பானது - பொதுமக்கள் ...
இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு புதிய நேர வரையறைகள் - சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவிப்...