இரு பேருந்துகள் கோர விபத்து: குவைத்தில் 15 பேர் பலி!
Monday, April 2nd, 2018
குவைத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 இந்தியர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தெற்கு குவைத் நகரில் அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அந்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்றும் எதிரில் வந்த பேருந்தும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில், 7 இந்தியர்களும், 5 எகிப்தியர்களும், 3 பாகிஸ்தானியர்களும் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் இந்தியர் ஆவார்.சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர், விபத்துக்குள்ளான பேருந்துகளில் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
Related posts:
ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் சில வேட்பாளர்களுக்கு அநீதி இழைக்கின்றது ...
கைதடியில் டொல்பின் வாகனம் குடை சாய்ந்தது – 10 இற்கும் அதிகமானோருக்கு காயம்!
சித்தங்கேணி இளைஞன் கொலை விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!
|
|
|





