இரு தினங்களில் விசேட வர்த்தமானி வெளிவரும் – சுகாதார அமைச்சர் பவித்ராவன்னி ஆரச்சி தெரிவிப்பு!
Thursday, July 16th, 2020
தேர்தல் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவத்தல் எதிர்வரும் இரு தினங்களில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ராவன்னி ஆரச்சி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஊடக தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்பதாக தேர்தல் குறித்த சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவத்தலை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்களுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தியிரந்ததுடன் அவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படாதுவிடின் தேர்தலை நடத்தவதும் சந்தேகமாகிவிடும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய பாடசாலையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இடமாற்றம்!
கொரோனா பரவல் - சர்வதேச ரீதியில் இரண்டாம் இடத்தில் இலங்கை!
தங்களுக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளது - ஜனாதிபதி ரணில் ...
|
|
|


