இராணுவ தளபதியின் அதி முக்கிய வேண்டுகோள்!

Saturday, March 21st, 2020

நாடு முழுவதிலும் 11,842 பேர் சுய தனிமைப்படுத்தளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், தற்போதைய காலகட்டத்தில் மக்களிடமிருந்து பூரண ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இல்லையெனில் நாடு பாரதூரமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டுக்காக மக்கள் செயற்பட வேண்டுமெனவும் இராணுவத் தளபதி இதன்போது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

Related posts:

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் அட்டை நடைமுறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - யாழ்.மாவட்டச் செயலர்...
போதைபொருள் பாவிப்பவர்களால் ஆட்சி மாற்றம் செய்ய அனுமதிக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந...
வவுனியா மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு –நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெ...