இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Tuesday, May 14th, 2019
இலங்கையில் தற்போது ஏற்பட்ட அவசர நிலைமை தொடர்பில் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு சபை பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனவர்த்தன மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கும் தகவல்களை மட்டும் நம்புமாறும், சமூக வலைத்தளங்கள் மற்றும் போலி குறுந்தகவல்கள் குறித்து அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் கேட்டுள்ளார்.
பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. படையினரின் செயற்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் அவர் கேட்டுள்ளார்.
இதேவேளை, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இராணுவத்தினருக்கு நேரிடும் என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க நேற்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்திற்கு தயார் : அரச மருந்தாக்கல் கூட்டுதாபனம்!
புத்திஜீவிகளின் ஆலோசனையின்றியே இம்முறை பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!
கொரோனா: 5 இலட்சத்தை நெருங்கும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை!
|
|
|


