இரண்டு மாதங்களில் ஊடக ஆணைக்குழு சட்டமூலம்!

ஊடக ஒழுங்குமுறை ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலத்தை, இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தயாரிக்கப்பட்டு, அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது,
இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு, அமைச்சரவை உப-குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டார். அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, வைத்தியர் ராஜித சேனாரத்ன மற்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர். அந்தக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக பிரதியமைச்சர் கரு. பரணவித்தான நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊடக ஒழுங்குமுறை ஆணைக்குழு தொடர்பிலான கலந்துரையாடலுக்கான அறிக்கை, கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது. அதற்கு அனுமதி கிடைக்கப்பட்டதன் பின்னர், அரசாங்க தகவல் திணைக்களத்தினால் மக்கள் கருத்தறிதல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Related posts:
|
|