இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் – இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்ப்பு!
Saturday, April 27th, 2024
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
அதனடிப்படையில் அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் அவர் நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, அவர் கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அவரது இந்த விஜயத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாவனையாளர்கள் சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு அபராதம்
திரவ பசளை இறக்குமதி கொடுக்கல் வாங்கல் தொடர்பான குற்றச்சாட்டை நிராகரித்தார் ஜனாதிபதி செயலாளர் !
அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை - திலீபன் MP நடவடிக்கை - பணிக்கர் புளியங்குளம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவான...
|
|
|


