இரட்டை சக்திகள் கொண்ட புகையிரதங்களை கொள்வனவு செய்யும் இலங்கை!

Sunday, March 5th, 2017

இந்தியாவிடம் இருந்து இலங்கை  இரட்டை சக்திகள் கொண்ட 6 புகையிரதங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் புதிய இரட்டை சக்தி கொண்ட 6 ரயில்கள் மற்றும் 10 என்ஜின்களை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையில் ரயில் பயண விதிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் பீ.ஏ.பீ.ஆரியர்தன தெரிவித்துள்ளார்.

இதற்காக இந்தியாவிடம் 100.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று ரயில்வே பொது மேலாளர் மற்றும் இந்திய பொருளாதார பேரவையின் அதிகாரி ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது. கொள்வனவு செய்யப்படவுள்ள ரயில் மற்றும் என்ஜின் இந்திய ரயில்வே அமைச்சினால் நெறிப்படுத்தப்படும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றது.

Related posts: