இரட்டை குழந்தை பெறும் தாய்மாருக்கு மாதம் ரூ.5000 ஒரு வருடத்திற்கு வழங்கத் தீர்மானம்!

இரட்டைக் குழுந்தைகளைப் பிரசவிக்கும் சமுர்த்தி அங்கத்தவர்கள் அல்லாத தாய்மாருக்கு மாதாந்தம் தலா 5ஆயிரம் ரூபா வீதம் 12 மாதங்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இதற்கான சுற்றறிக்கை சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் அனைத்துச் சமூர்த்தி முகாமையாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுளள்து. இரட்டைக் குழுந்தைகளைப் பிரசவிக்கும் தாய்மாருக்குச் சமுர்த்தித் திணைக்களம் சமூகப் பாதுகாப்பு நிதியிலிருந்து மாதாந்தம் 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்கவுள்ளது.
இதேவேளை இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை ஒரே நேரத்தில் பிரசவிக்கும் தாய்மாருக்கு மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வீதம் வழங்குமாறு அறிவித்துள்ளனர். சமுர்த்தி அங்கத்தவர்கள் அல்லாத பிரசவத் தாய்மாருக்கேன இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. மேலும் சமூர்த்தி திட்டத்தில் இணைந்துள்ள குடும்பங்களுக்கு குழந்தைப் பிரசவத்துக்கு 7ஆயிரத்து 500 ரூபாவும் சமூர்த்தி குடும்பத்தில் அங்கத்தவர்கள் சாவடைந்தால் 15ஆயிரம் ரூபாவும் சமூர்த்தி அங்கத்தவருக்குத் திருமணம் நடைபெற்றால் 7,500 ரூபாவும் வழங்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு, இறப்பு, மற்றும் திருமணப் பதிவு போன்ற சான்றிதழைச் சமர்ப்பித்து கொடுப்பனவை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|