இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி – தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Sunday, July 7th, 2024

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் ஜனாதிபதி தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் இந்த மாதம் 1 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விடவும் இந்த ஆண்டில் பத்து இலட்சம் வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

பான் கீ மூன் வருகை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது! இருந்தும் நாம் வரவேற்கின்றோம்  - வாசுதேவ நாணயக்கார!
யாழ்.  மணியம் தோட்டம் பகுதியில் தனது வீட்டு வளவினுள் கஞ்சா செடியை வளர்த்து வந்த சந்தேகநபர் கைது!
பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் - பிரதமர் மஹிந்த...