இன்று முதல் உயர்தர பரீட்சை வகுப்புகளுக்கு தடை!

ஓகஸ்ட் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் மற்றும் வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பரீட்சைகள் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பிருந்து அதனுடன் தொடர்புடைய கருத்தரங்குள் மற்றும் வகுப்புகளுக்கு தடை விதிக்கும் வகையிலான பரீட்சைகள் திணைக்களத்தின் சட்டத்திற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் , வகுப்புகள் ,மாதிரி வினாத்தாள் விநியோகம் , குழு கலந்துரையாடல் என்பனவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சை முடிவடையும் வரை இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க முடியயாதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.’ இந்த தடையை மீறி யாரேனும் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்
Related posts:
கிளிநொச்சியில் கோரம் - தாயும், மகனும் சடலங்களாக மீட்பு!
இரண்டு மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முற்பதிவு - இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ...
முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்துள்ளது - அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
|
|
தொடர்ந்தும் தவறிழைத்தால் கடும் முன்னெடுக்கப்படும் - சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் ...
எதிர்வரும் 17ஆம் திகதிமுதல் அறநெறி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் - புத்தசாசனம் மற்றும் கலாசார அலுவல்கள...
யாழ் மாநகரில் நாளைமுதல் புதிய சட்டம் அமுல் – நடைமுறைப்படுத்த புதிய காவல் படை உருவாக்கப்பட்டுள்ளது என...