இன்று தொடக்கம் ஒரு வழிப்பாதையாகும் வேம்படி வீதி!

மாணவர்களின் போக்குவரத்து வசதி கருதி யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு முன்பாகச் செல்லும் பலாலி வீதி குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு வழிப்பாதையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இன்று தொடக்கம் இந்த ஒரு வழிப்பாதை சேவையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பலாலி வீதியில் ஆஸ்பத்திரி வீதிச் சந்திக்கும் முதலாம் குறுக்கு வீதிச் சந்திக்கும் (ஏ-9 வீதியில்) இடைப்பட்ட வீதி இவ்வாறு குறிக்கப்பட்ட நேரத்துக்கு மட்டும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதி கருதி காலை 7 மணி தொடக்கம் 8 மணி வரைக்கும் மற்றும் பிற்பகல் 1 மணி தொடக்கம் 2 மணி வரைக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்.
Related posts:
பொருளாதாரத்தைப் பலப்படுத்தவே பொருளாதார சபை - ஜனாதிபதி!
பொதுமக்கள் தினத்தில் அலுவலகங்களில் அதிகாரிகள் வருகைதராதுவிட்டால் தெரியப்படுத்துங்கள் - பொது சேவை, மா...
கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த விருதுகள் இடைநிறுத்தம் - யாழ்ப்பாண பல்கலை துணை...
|
|