இன்று கைதிகள் பிரச்சினைக்கு தீர்வு! – வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே

அரசியல் கைதிகளுக்கு இன்று மாலைக்குள் முடிவொன்றைப் பெற்றுத் தருவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உறுதிமொழி வழங்கியுள்ளார்.
நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு வெலிக்கடை மகசின் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த வடமாகாண ஆளுனர் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 14 அரசியல் கைதிகளையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடியான பணிப்புக்கு அமைய தான் சிறைச்சாலைக்கு வந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதிகளின் கோரிக்கையை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறி மீண்டும் அவரைச் சந்தித்து கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இடது பக்கமாக முன்னோக்கி செல்வதை சரி செய்ய ஒருவருட கால சலுகை!
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை - இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவி...
பொருளாதார நெருக்கடி - இலங்கையில் அதிகரிக்கும் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவைச் சிகிச்சை - மத்திய வங்க...
|
|