இன்றுமுதல் 4 மணிநேரத்துக்கும் குறைவான மின்வெட்டு – இலங்கை மின்சார சபையின் தலைவர் அறிவிப்பு!
Saturday, April 2nd, 2022
மின்வெட்டு நேரம் இன்றுமுதல் குறைவடையும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.சி. பெர்டினாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –
நாட்டுக்கு வரவிருக்கும் டீசல் கையிருப்பை மின்சார சபைக்கு வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.
எனவே, நான்கு மணிநேரத்துக்கும் குறைவான மின்வெட்டு இன்று முதல் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மின்சார சபைக்குத் தொடர்ந்து டீசல் விநியோகம் கிடைத்தால், விரைவில் மின்வெட்டை முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
இதேவேளை, இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மெட்ரிக் டொன் அளவிலான டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இன்று மாலை இந்த டீசலை தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்ககது.
000
Related posts:
வாடிக்கையாளரை எச்சரிக்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை!
குறுகிய அரசியல் நலன்களுக்கு இரையாகாமல் நாட்டை முதன்மைப்படுத்தி செயற்படுங்கள் – மேதின செய்தியில் ஜனாத...
போலித் தேசியவாதிகளின் காலச் சூழலுக்கு ஒத்துவராத சிந்தனைகளைத் தூக்கி எறிவோம் – சமூக அக்கறையாளர்கள் வ...
|
|
|


