இன்றுமுதல் மின்வெட்டு ஏற்படாது – மின்சக்தி அமைச்சு அறிவிப்பு!
Friday, December 10th, 2021
நாட்டின் எந்தப் பகுதியிலும் இன்றுமுதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மின் விநியோகம் தொடர்பாக மின்சக்தி அமைச்சு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இத்தகவலை தெரிவித்துள்ளது.
அண்மையில் செயலிழந்த, நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின்பிறப்பாக்கிகள் வழமை போன்று மீண்டும் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, கடந்த இரு தினங்களில் அமுல்படுத்தப்பட்ட தலா ஒரு மணித்தியால மின்வெட்டு இன்றுமுதல் அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எஞ்சியது 20 கோடி ரூபா - அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் !
20,000 பட்டதாரிகளுக்கு ஜுலை 2 முதல் நியமனம்!
பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ கைது!
|
|
|


