இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டு!
Tuesday, August 29th, 2023
இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்..
அத்துமன் இனவாதக் கருத்துக்களைக் கக்கி ஆட்சிப்பீடம் ஏற எத்தனிப்பவர்கள் கடந்த கால வரலாறுகளை மறக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ஆட்சியை எந்தத் தரப்புக்கு வழங்குவதென நாட்டு மக்களே முடிவு செய்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களை எவரும் முட்டாள்களாக்க முடியாது என்றும், அவர்கள் ஜனநாயகவாதிகளையும், இனவாதிகளையும் அடையாளம் கண்டுவிட்டார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொழும்பில் துப்பாக்கிச் சூடு – இருவர் கவலைக்கிடம்!
ஆபத்து இல்லாத மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு சுற்றறிக்கை !
வடக்கில் ஒரு நாளில் 459 பேருக்கு கொரோனா தொற்றுறுதி - 8 கொரோனா மரணங்களும் பதிவு!
|
|
|


