இனங்காணப்படாத சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசின் ஒத்துழைப்பு!
Friday, June 9th, 2017
இனங்காணப்படாத சிறுநீரக நோயின் தாக்கம் நாட்டின் 11 மாவட்டங்களில் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாகவும், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நோய் நாட்டில் காணப்படும் இனங்காணப்பட்டுள்ளமுக்கியதொற்றுநோய்களுள் ஒன்றாகமாற்றம் பெற்றுள்ளது.நாட்டின் 11 மாவட்டங்களிலுள்ள 60 பிரதேசசெயலர் பிரிவுகளில் இந்நோய் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இந்நோய் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியமும் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவிடயத்தில் இலங்கைக்குஉதவும் நோக்கில் அவுஸ்திரேலிய ஆய்வுமற்றும் தொழில்நுட்பக் குழுவினர் நாட்டிற்கு வருகைதந்து குறித்த மாவட்டங்களில் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தபோது அவுஸ்திரேலிய அணு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்குமிடையே இனங்காணப்படாத சிறுநீரக தொற்றாநோய் பரவுவியல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


