இந்து சமுத்திர கடற்பரப்பில் நில அதிர்வு – இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது !
Saturday, July 1st, 2023
இலங்கைக்கு தென்கிழக்காக இந்து சமுத்திர கடற்பரப்பில், 5.8 ரிச்டர் அளவில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.
இன்று பிற்பகல் 12.59 அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பை சூழவுள்ள பல பகுதிகளில் சிறிதளவு உணரப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாகாண வரி மதிப்பீட்டாளர் போட்டி பரீட்சை எதிர்வரும் 7 ஆம் திகதி!
இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவத...
மட்டு மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் 79 பேர் தற்கொலை – வெளியானது அதிர்ச்சி தகவல்!
|
|
|


