இந்திய வம்சாவளி மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட காரணம் ஜீ.ஜீ.பொன்னம்பலம் – சிறிநேசன் எம்.பி.!

Tuesday, January 9th, 2018

1944 ஆம் ஆண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற கட்சி ஜி;.ஜி.பொன்னம்பலம் வாக்குரிமைச் சட்டம், குடியுரிமைச் சட்டம் என்பவற்றிற்கு ஆதரவு வழங்கி இந்திய வம்சாவளி மக்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதற்கு காரணமாக இருந்தார். வரலாற்றில் மறக்க முடியாத ஒரு தவறினை அவர் செய்திருந்தார். அந்தப் பரம்பரையில் இப்போது கூட தவறுகள் இடம்பெறுகின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறினேசன் தெரிவித்தார்.

மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டு என்பது தலைமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே அவர்களுக்குள்ளும் போட்டி நிலையேற்றப்பட்டுள்ளது

மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இணைந்துதான் போட்டியிடுவார்கள் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் இணைந்ததால் யார் தலைமைப் பதவி வகிப்பதென அவர்களுக்குள் ஒரு போட்டி உருவாகி விட்டது. இப்போது இருக்கின்ற கூட்டு என்பது தலைமையைப் பொறுத்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் செயற்படுகின்றது என்றார்.

Related posts:


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கு ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியால் உலருணவு பொருட்கள் ...
கட்டுப்படுத்த முடியாது தவிக்கும் அமெரிக்கா: கொரோனாவால் ஒரே நாளில் 12 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பேர் ப...
இலங்கையில் புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த நனோ தொழில்நுட்ப நிறுவனம் தயார் - நனோ தொழில்நுட்ப நிறுவனம...