இந்திய மீனவர்கள் 8 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது!
Monday, December 17th, 2018
இந்திய மீனவர்கள் 8 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்தே நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய தமிழகம் இராமமேஸ்வரம் மற்றும் நாகபட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், ஒரு படகில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட போதே, படகின் இஞ்சின் பழுதடைந்த நிலையில், காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்களும், கடற்படையினரால், யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் 8 மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்;ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Related posts:
நல்லிணக்கமும் தலைமைத்துவமும் தொடர்பில் வேம்படி மகளிர் கல்லூரியில் கருத்தரங்கு!
தற்போதுள்ள நிலை தொடர்ந்தால் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது – அனைத்தும் மக்களின் கைகளில் ...
வடக்கில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை -பலத்தகாற்று வீச வாய்ப்புள்ளதாக விரிவுரையாளர் நாகமுத்து பிர...
|
|
|


