இந்திய மீனவர்களின் அத்துமீறல் புதிதல்ல – செய்திகளை வெளியிடும்போது தமிழ் ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!
Wednesday, February 9th, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறல் சம்பவம் ஒரு புதிய விடயமல்ல என்றும் இது நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எனவே உணர்ச்சிவசப்பட்டு இதுதொடர்பான விடயங்களை வெளியிடும்போது, குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்திய மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்பட்டமை குறித்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வாறான மீனவர் அத்துமீறல் சம்வங்களுக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையில் இராஜதந்திர மட்டத்தில் தொடர்ந்தும் நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


