இந்திய பிரதமர் மோடிக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு இலங்கையின் புலனாய்வு அமைப்புகள் உச்ச விழிப்பு நிலையில் செயற்படுவதாக . ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மே 12ஆம் திகதி கொழும்பில் ஜ.நா.வெசாக் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதனை முன்னிட்டு இந்திய பாதுகாப்பு முகவர் அமைப்புகள், இலங்கையுடன் நெருக்கமாக இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் பயணத் திட்டத்தைக் குழப்பும் வகையிலான போராட்டங்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் மோடியின் பயணத்திற்கு முன்னதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த ஆங்கில வார இதழ் தெரிவித்துள்ளது
Related posts:
தொடரும் சீரற்ற காலநிலை :இருவர் பலி ! ஒருவரை காணவில்லை!! 6735 பேர் பாதிப்பு!!
எரிபொருள் விலை அதிகரிக்காது!
சமூக வலைத்தங்கள் மீதான தடை: இலங்கைக்கு அதிக வருமானம்!
|
|