இந்திய துணைத்தூதுவரின் வீட்டில் கொள்ளை – பொலிஸில் முறைப்பாடு!
Wednesday, December 12th, 2018
பகல்வேளையில் இந்திய துணைத்தூதுவர் அலுவலக அதிகாரியின் வீடு உடைத்து பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ். நாவலர் வீதி குறுக்கு வீதியில் நேற்று பகல் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்திய துணைத் தூதுவர் அலுவலக அதிகாரி காலை 8.30 மணியளவில் சென்று மாலை 6.30 மணியளவில் வீட்டிற்குத் திரும்புவது வழமை. வழமை போன்று நேற்றுக் காலையும் வீட்டை பூட்டி விட்டுச் சென்று மாலை வீட்டிற்கு வரும் போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது.
வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீட்டில் இருந்த 43 அங்குல ரீ.வி இரண்டும், ஸ்மாட் தொலைபேசிகள் இரண்டும், 5 ஆயிரம் ரூபா காசும் திருடப்பட்டுள்ளது.
இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையில் அந்த அதிகாரி முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Related posts:
|
|
|


