இந்திய துணைத்தூதரிடம் தேர்தல் விஞ்ஞாபனம் கையளிப்பு!
Thursday, December 28th, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ் இந்திய துணை தூதர் திரு ஆர்.நடராஜன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சார்பில் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களால் வழங்கி வைக்கப்படாது.
இந்திய மத்திய அரசிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று கோரிக்கை விடுத்ததன் நிமிர்த்தம் ஐமதாயிரம் வீட்டுத்திட்டம், யாழ் மற்றும் மன்னார் நோக்கிய புகையிரதப்பாதை, யாழ் நகர மத்தியில் கலாச்சார மண்டபம், கைதடி பனை ஆராய்ச்சி நிலையம், அச்சுவேலி கைத்தொழில் பேட்டை மற்றும் மனிதாபிமான உதவிப்பணிகள் என எமது மக்களுக்கு இந்திய அரசால் வழங்கி வைக்கப்பட்டது.
இவைகளுக்கு நன்றி கூறும் ஓர் மரியாதை நிமிர்த்தமும் திரு நடராஜன் அவர்களின் சிறந்த நல்லெண்ண செயற்பாடுகள் காரணமாகவுமே எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று யாழ் இந்திய துணை தூதர் திரு ஆர்.நடராஜன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

Related posts:
|
|
|


