இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில்!
Saturday, September 2nd, 2023
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Delhi எனும் யுத்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் 163 மீற்றர் நீளமுடையது. கப்பலில் வருகை தந்த கடற்படை வீரர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்லவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
INS Delhi கப்பலை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில் நாட்டில் நங்கூரமிடப்பட்டிருக்கும். மேற்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் பயிற்சி நடவடிக்கைகளிலும் குறித்த கப்பல் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!
மகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிக்குமாறு இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்க...
எதிர்வரும் 12 ஆம் திகதி ஒரு இலட்சம் ரஷ்ய தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கும் - அரச மருந்தாக்கல் கூட்...
|
|
|


