இந்தியா – இலங்கை இடையே எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பில் இரு நாடுகளின் அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடல்!

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சந்திப்பு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் (12.07) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்ததுடன் குறித்த விடயம் தொடர்பிலும் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
இந்த நாட்டில் எரிபொருள் விநியோகத்தை விரைவுபடுத்துவதும், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்டபிடத்தக்கது.
Related posts:
யாழ்.மறைமாவட்டத்தில் அனைத்து ஆலய செயற்பாடுகளுக்கும் தடை - ஞானப்பிரகாசம் ஆண்டகை!
அப்லொடொக்சின் அடங்கிய தேங்காய் எண்ணெய் மாதிரிகளை சந்தையிலிருந்து மீளப் பெற அறிவித்தல்!
அரச பணியாளர்களுக்கு தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியம் - அமைச்சரவையும் அங்கீகாரம்!
|
|