இந்தியாவிலிருந்து வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!
Monday, June 17th, 2024
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் இருந்து 12,144 பேர் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.
அத்துடன் பிரித்தானியாவில் இருந்து 3,475 பேரும், சீனாவில் இருந்து 3,095 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 2,272 பேரும் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜனாதிபதி இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு விஜயம்!
உயர்தரப் பரீட்சையை ஓகஸ்ட் மாதம் நடத்தத் தீர்மானம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
எரிவாயு கப்பல் வருவதில் மேலும் 3 நாட்கள் தாமதம் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|
|


