இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே நியமனம்?
Wednesday, January 29th, 2020
தற்போதைய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான தரஞ்சித் சிங் சந்து அமெரிக்காவுக்கான இந்திய தூதவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று இந்த அறிவித்தலை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய இல்லத்தில் நேற்று முன்தினம் அவருக்கான பிரியாவிடை வைபவம் இடம்பெற்றது.
அதில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக, சிரேஷ்ட இராஜதந்திரி கோபால் பாக்லே (Gopal Baglay) நியமிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொறுப்பதிகாரிகளின் நியமனம் பொலிஸ் ஆணைக்குழுவின் கீழ்!
நிதி நகர்த் திட்டம் கைவிடப்பட மாட்டாது - அமைச்சர் சம்பிக்க ரணவக்க!
வெளிநாட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து - இலங்கையில் சட்டப்படி செல்லுபடியாகும் -மேன்முறையீட்டு நீதிமன்ற...
|
|
|


