ஆளும் தரப்பு பங்காளிக் கட்சி தலைவர்களுடன் பிரதமர் தலைமையில் நாளை கூட்டம் !
Sunday, April 18th, 2021
ஆளும் கட்சியின் பங்காளி கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று நாளை (19) இடம்பெறவுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சியின் தலைவர்களிடத்தில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இந்த கூட்டத்தின் போது எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சட்டத்தின் சில சரத்துகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒரு நிலைப்பாட்டினையும் ஏனைய கட்சிகள் வேறு நிலைப்பாட்டினையும் கொண்டுள்ள காரணத்தினால் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடியாதுள்ளது.
அதேநேரத்தில் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் மே தின கூட்டத்தொடர் என்பன குறித்தும் நாளை இடம்பெறவுள்ள ஆளும் கட்சியினது பங்காளிகட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


