ஆலய திருவிழாவில் பட்டாசு வெடித்து இளைஞன் படுகாயம்!
Saturday, March 2nd, 2019
யாழ். குரு நகர் 5 மாடிக்குடியிருப்பிற்கு அருகில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய திருவிழாவில் பட்டாசு கொளுத்திய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞர் பட்டாசு கொளுத்திய போது அவரின் வலது கையில் உள்ள ஐந்து விரல்களிலும் எரிகாயம் ஏற்பட்டுள்ளது.
பெருமளவான பட்டாசுகள் இந்த சந்தர்ப்பத்தில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் யாழ். போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர் மங்கள சரவீர சந்திப்பு!
விஷ ஜந்துக்களின் தாக்குதல் அதிகரிப்பு - அச்சத்தில் தென்மராட்சி மக்கள்!
நாடாளுமன்ற தோர்தல் தொடர்பில் இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் - தேர்தல் ஆணைக்குழு தகவல்!
|
|
|


