ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்கு – யாழில் போராட்டம் !

Tuesday, October 11th, 2016

மலையகத் தோட்டத் தொழிலாளர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சம்பள உயர்வுக்கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ‘ஆயிரம் ரூபா நாள் சம்பளத்தை வழங்கு என வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை (11) முற்பகல்-10 .30 மணியளவில் யாழ். பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாகச் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் கவனயீர்ப்பு போராட்டமொன்று  நடாத்தப்பட்டுள்ளது.

அமைப்பின் இணைச் செயலாளர் ச.தனுஜன் தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புடன் இணைந்து  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புதிய ஜனநாயக மார்க்சிஷ லெனினிசக் கட்சி மற்றும் பல சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவான பல சுலோகங்களைத் தாங்கியிருந்ததுடன் மலையகத் தொழிலார்களுக்கு ஆதரவான பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.

unnamed

Related posts: