ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பல்கலைப் பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் – பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தகவல்!
Sunday, November 5th, 2023
இந்த ஆண்டு மாத்திரம் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 1,800 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 800 பேர் இலங்கையில் பல்கலைக்கழக சேவையிலிருந்து நிரந்தரமாக வெளியேறியுள்ளதாக அதன் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனைய 1,000 பேர் கல்வி விடுமுறையில் வெளிநாடு சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பல்கலைக்கழகங்களில் வசதிகள் இன்மை பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொள்கையில் மாற்றமில்லை - அவுஸ்திரேலியா!
சிறுவர்களிடையே கொரோனா பரவல் அதிகரிப்பு - கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ...
வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா செப்டம்பர் 24 ஆம் திகதி கொடியேற்றத்துட...
|
|
|


