ஆசிரியர் சேவையில் 8 ஆயிரம் பேரை இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை!

கல்வியல் கல்லூரியில் டிப்ளமோ பாடநெறியை பூர்த்தி செய்த 8 ஆயிரம் பேரை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளில் இவர்கள் கடமையாற்றவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்காக பல்வேறு பாடசாலைகளிலும் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் எதிர்வரும் பாடசாலை தவணைக்கு முன்னதாக இவர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதனுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் - கிளி.அம்பாள் விளை...
அமெரிக்கா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு சர்வதேச மன்னிப்பு சபை எச்சரிக்கை.!
ஜனாதிபதி ரணில் - அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சந்திப்பு!
|
|