ஆசிரியர்கள் அதிபர்கள் சுகவீன விடுமுறை போராட்டம் – பரும் அசௌகரியங்களுக் உள்ளான மாணவர்கள்!
Wednesday, June 26th, 2024
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கங்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகவீன விடுமுறை போராட்டம் காரணமாக மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதை அவதானிக்க முடிந்தது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று காலை பாடசாலைக்குச் சென்ற பெரும்பாலான மாணவர்கள், வீடுகளுக்குத் திரும்பிச் சென்றதை காணமுடிந்தது.
வேதன நிலுவையை வழங்கக் கோரியும் அதிபர், ஆசிரியர் சேவையில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் காணப்படுவதாகவும் தெரிவித்து நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் இன்றையதினம் சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நச்சுப்புகைகளை வெளியேற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை - இலங்கை மோட்டார்...
இலங்கை -சீனா இடையே நேரடி விமான சேவை!
நட்பு நாடாக இருந்தாலும் தரம் குறைவான சீன உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது – அரசாங்கம் தெரிவிப்பு...
|
|
|


