ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணை – மீண்டும் வீதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க தயாராகும் துறைசார் அமைச்சு!
Sunday, May 28th, 2023
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தற்போது நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தித் திட்டங்களை உடனடியாக மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதே அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோள் என்றார்.
ஏற்கனவே மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பல வீதிகளை சீரமைக்காவிட்டால், எதிர்காலத்தில் மக்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்த முடியாது என கவுன்சிலர்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெப்பத்தை கட்டுப்படுத்தும் களஞ்சியசாலை - அமைச்சரவை அங்கீகாரம்!
50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி?
95 ஒக்டென் பெற்றோல் நாளைமுதல் விநியோகிக்கப்படும் - வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவிப்பு!
|
|
|


