ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்குள் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவுறும்!

Friday, July 15th, 2016

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகும் என எல்லை நிர்ணய குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், உள்ளுராட்சி மன்றங்களுடன் தொடர்புடைய சகல எல்லை நிர்ணயப் பணிகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக முழுமையாக பூர்த்தியாகும்.

எல்லை நிர்ணயப் பணிகள் அது தொடர்பில் எழுந்த பிணக்குகள் 95 வீதம் வரையில் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தீர்க்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.

நாடு முழுவதிலும் காணப்படும் 4822 தொகுதிகளின் 2000க்கும் மேற்பட்ட தொகுதிகளில் காணப்பட்ட பிணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை சுபநேரமொன்றில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது

Related posts: