ஆகக் கூடுதலான அபிவிருத்தியை வடக்கு – கிழக்கில் ஏற்படுத்த நடவடிக்கை – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல!

ஆகக் கூடுதலான அபிவிருத்தியை வடக்கு – கிழக்கில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கின் அபிவிருத்திக்காக இந்தியாவின் உதவியை பெறும் விசேட பெக்கேஜ் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 475 கிராமிய பாதைகள் காப்பட் முறையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியின் அனுகூலங்களை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில், இலங்கையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலைகளையும், பாலங்களையும் மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப் போவதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார்.
Related posts:
வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு: கொழும்பில் மீண்டும் பதற்றம்!
டெல்டாவை விட வீரியம் மிக்க கொவிட் வைரஸ் திரிபு தென்னாபிரிக்காவில் அடையாளம்!
எமது முற்றத்தில் வந்து தொழிலை மேற்கொண்டுவிட்டு தவறுகளை மறைக்க எம்மையும் கடற்படையினரையும் குற்றம் சும...
|
|