அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் – ஜனவரி மாதம்முதல் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவிப்பு!
Monday, December 11th, 2023
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் முதலாவது கட்டத்தை முன்னெடுக்கும்போது ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளும் கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 14 இலட்சத்து 69 ஆயிரத்து 32 பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பிரிவினைவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது - மஹிந்த ராஜபக்ஷ!
மாகாண எல்லைகளை தாண்டும் பயணிக்கும் பயணிகளிடம் சேவை அடையாள அட்டை சோதனை நடத்தப்படும் – இலங்கை போக்குவர...
எதிர்வரும் புதனன்று எரிவாயு சிலிண்டர் வெடிப்பு தொடர்பிலான அறிக்கை வெளியிடப்படும் - ஜனாதிபதியால் நியம...
|
|
|


