அஸ்வெசும நலன்புரித் திட்டம் – சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, June 5th, 2024

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுவதினை ஏற்றுக்கொள்கின்றோம் என  நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் கட்ட விண்ணப்பம் கோரல் இம்மாதம் கோரப்படும்.  ஆகவே எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் தகவல் விண்ணப்பங்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நலன்புரி கொடுப்பனவு வழங்கலில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தவறான வழிமுறைகள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக திருத்தப்பட்டுள்ளது

நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளை தீவிரப்படுத்தி நெருக்கடிகளை தீவிரப்படுத்த ஒருதரப்பினர் முயற்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார்

Related posts: