அவுஸ்ரேலிய விளையாட்டுத்துறை பிரதிநிதிளுடன் யாழ்.அரச அதிபர் சந்திப்பு!
Saturday, November 12th, 2016
அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் மாகாண மட்டத்தில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நீண்டநாள் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக ஆராயும் பொருட்டு குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் பணிப்பாளர் ஜே.ரெய்லர் தலைமையிலான அவுஸ்ரேலிய பிரதிநிகள் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நா.வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினர்.
விளையாட்டுத்துறை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் முதற்;கட்டத்தின் கீழ் மேல்மாகாணம் வடமேல் மாகாணம் மற்றும் வடமாகாணம் ஆகியன உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மாகாணங்களில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் முகமாக வீரர்களுக்கான விசேட பயிற்சிகளை தாம் வழங்கவுள்ளதுடன் நிதி உதவியையும் வழங்கவிருப்பதாகவும் குழுவினர் அரச அதிபரிடம் தெரிவித்தனர் இந்த பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரமப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்

Related posts:
|
|
|


