அலுவலகங்களில் கைவிரல் அடையாள பதிவு – கட்டாயமாக்கப்படவுள்ளது!
Thursday, May 18th, 2017
அரச நிறுவனங்களில் சேவையாளர்கள் பணிக்கு வருகை தருவதையும் பணியை முடித்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள மற்றும் கூட்டுத்தாபன பிரதானிகளுக்கும் இதற்கான விசேட சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துமாறு இதற்கு முன்னர் அறிவித்திருந்தபோதும், உரிய முறையில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்நிலையிலேயே, சுற்றுநிரூபம் ஊடாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா தொற்று அதிகரிப்பு: 2 ஆயிரம் நோயாளர்களை எதிர்கொள்ள தயாராகும் இலங்கை!
திங்கள்முதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகம் - பிரதி தபால்மா அதிபர்!
கண்டியில் ஏற்பட்ட நில அதிர்வுகளுக்கும் மூவரின் உயிரைக் காவுகொண்ட கட்டட விபத்துக்கும் தொடர்பு இல்லை -...
|
|
|


