அரைக் கம்பத்தில் தேசியக் கொடி – மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமருக்காக இன்று இலங்கையில் தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!

மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இன்றையதினத்தை தேசிய துக்க தினமாக பிரகடனப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இன்றையதினத்தில் நாட்டின் அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அந்த அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்திருந்தது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க பொது நிர்வாக உள நாட்டலுவல்கள் அமைச்சு அந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
எவ்வாறாயினும் இன்றையதினம் அரசாங்க விடுமுறை தினம் அல்ல என்பதையும் அமைச்சு தெரிவித்துள்ளது .
Related posts:
வர்தா எதிரொலி: இலங்கை வான் பரப்பில் அதிகரித்துள்ள விமானங்கள்!
அரிசி கட்டுப்பாட்டு விலை அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை!
எரிபொருளின் விலையை நிர்ணயிப்பது பெட்ரோலிய சட்டப்பூர்வ கழகத்தின் செயல்பாடு அல்ல – பெற்றோலிய சட்டக் கூ...
|
|