அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது: ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் மற்றும் பயிற்சி நிறுவகம்!
Monday, April 23rd, 2018
நாட்டில் ஒரு வருடத்திற்குத் தேவையான அரிசி கையிருப்பில் இருப்பதனால், இவ்வருடத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமில்லை என்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் மற்றும் பயிற்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
கடந்த பெரும் போகத்தில் 1.6 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி பெறப்பட்டுள்ளது. இது 8 மாத காலங்களுக்குப் போதுமானதாகும். இம்முறை சிறுபோகத்தில் அமோக அறுவடை கிடைப்பதனால் சுமார் 1 மில்லியன்; மெற்றிக் தொன் அரிசியை இதன் மூலம் பெற முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இது நான்கு மாத காலத்திற்குப் போதமானதாகும். இலங்கைக்கு வருடமொன்றுக்கான அரிசியின் தேவை 2.4 மில்லியன் மெற்றிக் தொன்களாகும். இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி மேலதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதனால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய அலுவல்கள் மற்றும் பயிற்சி நிறுவகத்தின் சிரேஷ்ட ஆய்வுத்துறை அதிகாரியும்இ வாழ்க்கை செலவு குழுவின் அங்கத்தவருமான டபிள்யு.ஏ.துமிந்த பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


