அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்!
Thursday, December 21st, 2017
நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வாழ்க்கைச் செலவு குழு தீர்மானித்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் கூடிய வாழ்க்கைச் செலவு குழு கலந்துரையாடியபோது, நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் அதிகளவில் நுகர்வு செய்யப்படும் நாட்டரிசி உள்ளிட்ட அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
இதனால் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உள்நாட்டு நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேற்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
Related posts:
இடியுடன் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
வடக்கின் வசந்தத்தை குழிதோண்டிப் புதைத்தவர் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் - நாடாளுமன்றில் சுட்டிக்கா...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை குறித்து 3ஆம் திகதி உரையாடல் - வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தல...
|
|
|


