அரச வங்கிக் கடன்களை அறவிடுவதற்கு எவருக்கும் எந்த பாரபட்சமும் காட்டப்படாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, February 22nd, 2024

அரச வங்கிக் கடன்களை அறவிடுவதற்கு முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் எந்த பாரபட்சமும் காட்டப்படாது என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வங்கி வாடிக்கையாளர்களில், நெத்தலி, பாறை மீன் என வகை பிரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. சலுகைகள் வழங்கப்படுவதுமில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது கேள்வியின் போது, அரசாங்க வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாக்களை பலர் கடனாக பெற்றுள்ளனர்.

இவர்களுடமிருந்து இதனை அற விடுவதில் அரச வங்கிகள் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: