அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நள்ளிரவு வெளியிடப்பட்டது மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி!
Tuesday, June 21st, 2022
மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி முதல் நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் அரச தலைவர் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், “மின்சாரம் வழங்கல், பெற்றோலிய மற்றும் எரிபொருள் விநியோகம், வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும்” வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, மின்சாரம் வழங்கல், பெற்றோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் அல்லது பராமரிப்பு, வைத்தியசாலைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அது போன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்த வகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


