அரச ஊழியர்களை பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியாது!
Friday, August 5th, 2016
அரச ஊழியர்களை பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஊடாக கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சின் புதிய செயலாளராக நீல் டி அல்விஸ் நேற்றைய தினம் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போது, அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசியல் சாசனம் மற்றும் நிறுவன ஒழுக்கக் கோவை ஆகியனவற்றின் அடிப்படையிலேயே அரச ஊழியர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். அரச ஊழியர்களை பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் ஊடாக கட்டுப்படுத்த முடியாது, பொலிஸ் மா அதிபர் கூட பொலிஸ் கட்டளைக் சட்டத்திற்கு உட்பட்டவர் அல்ல. நாட்டின் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் அரச ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.
அரச ஊழியர்கள் சரியானதைச் செய்தால் அவர்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுப்பேன் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
10 ஆண்டுகள் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கான இடமாற்ற கடிதங்கள் அதிபர்களிடம்!
தடுப்புக் காவலில் இருந்த கைதி உயிரிழப்பு – உயிரிழப்புக்கு வட்டுக்கோட்டை பொலிசாரின் சித்திரவதையே காரண...
மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டம் - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்...
|
|
|


