அரச அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றச்சாட்டு!

Friday, October 7th, 2016

நாட்டில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு எதிராக கிடைக்கின்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

சொத்துக்கள் தொடர்பிலும், உரியவாறு விலைமனு கோரல் விதிகளை பின்பற்றாமை தொடர்பிலும் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து, அவை தொடர்பில் வழக்குத் தொடரவுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுதவிர அரச உத்தியோகத்தர்கள் தன்னிச்சையாக விலைமனுக்களை வழங்கியுள்ளமை குறித்தும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

bribery-commissiion

Related posts: